தரம் 06 மாணவர்களுக்கான சைவநெறி பாட நிகழ்நிலை வினாத்தாள் - கருத்தரங்கு
அலகு 01 - 04 வரையானவற்றை உள்ளடக்கிய 20 வினாக்களைக் கொண்டுள்ளது.
வினாத்தாளைச் செய்வதற்கு உரிய இணைப்பு மூலமாகச் சென்று, அங்கு உங்கள் பெயர், பாடசாலை, வலயம், மாவட்டம், மாகாணம் என்பவற்றைச் சரியாக பதிவிடுங்கள்.
-------------------------------------------------------------------
அலகு 01 - விநாயகர்
இந்து சமயத்தின் முதல் வழிபாட்டிற்கு உரியவர் விநாயகர். இவரை பிள்ளையார், கணபதி, விக்னேஸ்வரர், கஜானனர், வக்ரதுண்டர், ஐங்கரன் எனப் பல பெயர்களினால் போற்றி வழிபடுவர்.
மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து அனைவராலும் வழிபடப்படுகின்றார். சிங்களவரும், பொளத்தரும் "கண தெய்யோ" எனப் போற்றுவர்.
எளிமையும், அருளும், ஆற்றலும் நிறைந்தவர். விரும்பிய இடத்தில், விரும்பிய கணத்தில், விரும்பிய வடிவத்தில் வழிபடக் கூடியவர்.
குழந்தைகளைப் போலவே மோதகம் - கொழுக்கட்டைப் பிரியர். ஆற்றங்கரை, குளக்கரைகளிலும், அரசமரம், ஆலமரங்களின் அடியிலும் விரும்பி அமர்ந்திருப்பார். அவரை,
"மூஷிக வாகன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித சூஸ்த்ர
வாமன ரூப மகேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே"
என போற்றுவர்.
"பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்.." எனப் பாடித் துதிப்பர்.
----------------------------------------------------------------------------------------------
அலகு 02 - சைவ இல்லம்
சைவசமயத்தவர்களின் இல்லம் சைவ இல்லம் எனப்படும். முழுமுதற் கடவுளான சிவபெருமானின் ஆலயம் புனிதமாகப் போற்றப்படுவதைப் போல, சைவ மக்களின் இல்லமும் புனிதம் மிக்கது. தெய்வீக சந்நதியாக, கலைக் கோவிலாகப் போற்றப்படுவது.
சைவசமயத்தவர்களாகிய நாம் தினமும் நமது வீட்டில் பல்வேறு சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். காலை எழுந்தது முதல் இரவு நித்திரைக்குச் செல்லும் வரை எமக்கு கடமைகள் நிறையவே இருக்கின்றன.
பண்டிகைகள் மற்றும் விரத காலங்களில் நமது வீடுகள் மிகவும் புனிதத் தன்மை மிக்கனவாக விளங்குகின்றன. நமது வீடுகள் தான் நாம் நற்பழக்கவழக்கங்கள் பழகுவதற்கான முதற் பல்கலைக்கழகங்கள் ஆகும்.
----------------------------------------------------------------------------------------------
அலகு 03 - நாளாந்த செயன்முறைகள்
நமது அன்றாட வாழ்வு நன்றாக அமைய வேண்டும் என்பதற்காக நாம் தினம் தோறும் பல்வேறு காரியங்கள் செய்கிறோம்.
குறிப்பாக சூரிய உதயத்தின் முன் துயில் எழுதல், காலைக் கடன்களை முடித்து, நீராடி, தூய ஆடை அணிந்து, திருநீறு முதலான சிவ சின்னங்களை சிவ சிந்தையுடன் தரித்துக்கொண்டு, இறை வழிபாடு செய்தல் போன்ற பல்வேறு விடயங்கள் குறிப்பிடத்தக்கன.
காலையும் மாலையும் இறைவனை வழிபடுதல், பெற்றோரை வழிபடுதல், அதேபோல நாம் உணவு உண்ணத் தொடங்கும் முன் இறைவனை வழிபாடு செய்தல், அதேபோல நம் உணவில் ஒரு பகுதியை காகம், பசு, கோழி முதலிய பிராணிகளுக்கு இடுதல், ஏழைகளுக்கு உணவு வழங்குதல் போன்ற பல்வேறு காரியங்களை அன்றாடம் நாம் செய்வது சிறப்பானது.
நம்மால் இயன்ற சிறு உதவிகளை பிறருக்கு செய்வது மிகச் சிறந்த செயலாகும்.
----------------------------------------------------------------------------------------------
அலகு 04 - சமூகம் சார்ந்த விழுமியங்கள்
விழுமியம் என்பது மனித வாழ்வை மேம்படுத்தும் வகையில் கடைப்பிடிக்கப்படும் பெறுமதிமிக்க வாழ்க்கைப் பண்புகளாகும்.
இவை உயர்வானவை, பெறுமதியானவை, உன்னதமானவை என்று கூறப்படுகின்றன.
திருக்குறள் முதலான பல்வேறு நூல்களும் மனிதர்கள் வாழ்வாங்கு வாழ தேவையான பல்வேறு விழுமியப் பண்புகளை எடுத்துக் கூறுகின்றன.
குறிப்பாக உண்மை பேசுதல், பெரியோரைக் கனம் பண்ணுதல், நன்றி மறவாமை, தர்மம் போன்ற பல்வேறு விழுமிய பண்புகள் மனிதர்களை சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு உயர்த்தக்கூடியவையாகும்.
----------------------------------------------------------------------------------------------------
வினாத்தாள்
கீழேயுள்ள இணைப்பின் ஊடாக வினாத்தாளை அணுகலாம்.
👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇
வாட்ஸ்அப் தொடர்பிற்கு - 0772359142

0 Comments